| 245 | : | _ _ |a தியாகதுருகம் கோட்டை - |
| 300 | : | _ _ |a கோட்டை |
| 500 | : | _ _ |a தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் நகரத்திலிருந்து 60 கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் உள்ளது. இது கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட்டை உள்ளது. இது 16-ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 18-ஆம் நுாற்றாண்டில் இராணுவத் தளமாக செயல்பட்டது. 1756-ல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டை, 1760-இல் ஐதர் அலி வசமானது. இதன் பின்பு ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து 1790-ல் திப்பு சுல்தான் போர் புரிந்து கைப்பற்றினார். இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், சூரியன் பார்க்காத கிணறு, தாமரைக்குளம், குதிரை யானை போன்ற விலங்குகள் தங்குவதற்கான இடங்கள் போன்றவை இன்றும் மறையாமல் உள்ளது. ஆங்கிலேயா்கள் இக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் மிகப்பெரிய நான்கு பீரங்கி குண்டுகளின் மூலம் கோட்டையைத் தாக்கியுள்ளனா். இதற்குச் சான்றாக கோட்டையில் நான்கு பீரங்கி குண்டுகள் காணக் கிடைக்கின்றன. |
| 520 | : | _ _ |a தியாகதுருகம் நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி 1756 ஆம் நூற்றாண்டு பிரான்சு ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. |
| 653 | : | _ _ |a தியாகதுருகம், தியாகதுர்கம், விழுப்புரம், கோட்டை, மலைக்கோட்டை, மத்திய தொல்லியல் துறை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a தியாகதுர்கம் |c தியாகதுர்கம் |d விழுப்புரம் |f கள்ளக்குறிச்சி |
| 906 | : | _ _ |a கி.பி.18-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 11.7441045 |
| 915 | : | _ _ |a 79.0729793 |
| 934 | : | _ _ |a அருகர் குகைக் கோயில் |
| 995 | : | _ _ |a TVA_MON_00024 |
| barcode | : | TVA_MON_00024 |
| book category | : | கோட்டைகள் |
| cover | : |
|
| Primary File | : |